Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பதான் திரைப்பட போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம்... நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

பதான் திரைப்பட போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம்... நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

By: Nagaraj Mon, 23 Jan 2023 9:58:21 PM

பதான் திரைப்பட போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம்... நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

கவுகாத்தி: பதான் திரைப்படம் தொடர்பாக, நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை என உறுதியளித்தேன். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் பதான். இப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் பேசாரம் ரங் பாடல் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதில் நடித்த தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையில் காட்சியளித்ததால் சர்ச்சை கிளம்பியது.

இது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில், அசாமின் கவுகாத்தி நகரில் பதான் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை பஜ்ரங் தள அமைப்பாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு போஸ்டர்களை கிழித்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

chief minister biswa,guwahati,shah rukh khan ,, கவுகாத்தி, முதலமைச்சர் பிஷ்வா, ஷாருக்கான்

இந்நிலையில், நேற்று அதிகாலை முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் அதை எடுத்ததும், மறுமுனையில் நடிகர் ஷாருக்கான் அவரிடம் பேசினார். இந்நிலையில், முதலமைச்சர் பிஷ்வா வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று அதிகாலை 2 மணியளவில் என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
கவுகாத்தி நகரில் அவரது பதான் திரைப்படம் தொடர்பாக, நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை என உறுதியளித்தேன். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :