Advertisement

சேலை கட்டிய நேஹாவின் புகைப்படம்... ரசிகர்கள் வியப்பு

By: Nagaraj Sat, 07 Jan 2023 5:35:14 PM

சேலை கட்டிய நேஹாவின் புகைப்படம்... ரசிகர்கள் வியப்பு

சென்னை: பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் நேஹா சேலையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். பள்ளி செல்லும் குழந்தையாக நடிக்கும் அவரா இப்படி என ரசிகர்கள் பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.


விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நேஹாவுக்கு மொத்தம் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நேஹா அவரது பர்சனல் விஷயங்களை கூட இன்ஸ்டாக்ராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

pakyalakshmi,series,fans surprise,saree,photo ,பாக்கியலட்சுமி, தொடர், ரசிகர்கள் ஆச்சர்யம், சேலை, போட்டோ

பல வருடங்களுக்கு பிறகு நேஹாவின் அம்மா கர்ப்பமாகி தற்போது நேஹாவுக்கு தங்கை பிறந்திருக்கிறார். அதனை நேஹா இன்ஸ்டாகிராமில் வெளியிட அதையும் சிலர் ட்ரோல் செய்தனர்.

மேலும் நேஹா பெரிய பெண்ணாக வளர்த்த பிறகும் கூட ஸ்கூல் குழந்தையாகவே சீரியல்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் நேஹா தொடர்ந்து பதிலடியும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நேஹா சேலையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். பள்ளி செல்லும் குழந்தையாக நடிக்கும் அவரா இப்படி என ரசிகர்கள் பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

Tags :
|
|