Advertisement

பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் ரூ.10 கோடி வரை வசூல்

By: Nagaraj Sat, 20 May 2023 7:36:49 PM

பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் ரூ.10 கோடி வரை வசூல்

சென்னை: பிச்சைக்காரன் -2 படம் முதல் நாளில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறிய விஜய் ஆண்டனி தற்போது நடித்து நேற்று வெளியான படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படம் நேற்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்தனர்.

2016ல் வெளியான பிச்சைக்காரன் முதல் பாகம் இன்னொரு லெவல் படம். ஆனால், இரண்டாம் பாகம் அவ்வளவாக அமையவில்லை. மேலும் இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிக மோசமாக இருந்தது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்துள்ளார்.

film,movie,vijay antony, ,பிச்சைக்காரன்2, முதல் நாள், வசூல்

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 5 முதல் 6 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் 2 முதல் 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. தெலுங்கில் 2 முதல் 3 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அதனால் படம் கிட்டத்தட்ட ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படத்திற்கு அதிக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Tags :
|
|