- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிச்சைக்காரன் 2 படம் ரூ.30 கோடியை தாண்டி வசூல் வேட்டை
பிச்சைக்காரன் 2 படம் ரூ.30 கோடியை தாண்டி வசூல் வேட்டை
By: Nagaraj Thu, 25 May 2023 11:22:44 PM
சென்னை: பிச்சைக்காரன் 2 படம் இதுவரை ரூ.30 ோடியை தாண்டி வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி ஒரு இயக்குனராக பிச்சைக்காரன் 2 படம் மூலம் இறங்கியுள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டு இந்த படத்தில் பணியாற்றி இருக்கிறார். தமிழ், தெலுங்கு என வெளியாகி இருக்கும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
தெலுங்கில் படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா படத்திற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு பதிவுகளை தனது டுவிட்டரிலும் பகிர்ந்த வண்ணம் உள்ளார்.
கடந்த மே 19ம் தேதி வெளியான இப்படம் இதுவரை ரூ. 30கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் நல்லபடியாக வரும் என்கின்றனர்.