Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய் படம் நன்றாக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்... ஷோபா சந்திரசேகர் வேண்டுகோள்

விஜய் படம் நன்றாக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்... ஷோபா சந்திரசேகர் வேண்டுகோள்

By: Nagaraj Wed, 28 Dec 2022 12:03:35 PM

விஜய் படம் நன்றாக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்... ஷோபா சந்திரசேகர் வேண்டுகோள்

சென்னை: விஜய் படம் நன்றாக வர வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நடிகர் விஜய்யின் தாய் ஷோபா கேட்டுக் கொண்டுள்ளார்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘வாரிசு’ படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. இதில், சந்திரசேகர், ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

shoba,varisu,vijay, ,வாரிசு, விஜய், ஷோபா, கேரக்டர், படம், பிரார்த்தனை

இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா காஞ்சிபுரம் காமாச்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டி இங்கு வந்தேன். விஜய் படம் நன்றாக வர வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

மேலும் விஜய்யின் அடுத்த படம் குறித்த கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் எந்தப் படத்தில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. வாரிசு படத்தில் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. இந்தப் படம் குடும்பப் படம் என்பது மட்டும்தான் தெரியும் என்றார்.

Tags :
|
|
|