Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கறுப்புத் தங்கம்; கவிஞர் வைரமுத்து

By: Monisha Sat, 12 Sept 2020 12:55:45 PM

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கறுப்புத் தங்கம்; கவிஞர் வைரமுத்து

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்றும் தமிழகத்தில் புதிதாக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தடுப்பூசியும் கண்டுபிடிக்காத நிலையில் லட்சக்கணக்கான பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக நமது இந்திய கலாச்சார உணவுகள் இயற்கையிலேயே கொரோனாவுக்கு எதிராக தானாகவே வேலை செய்கிறது என்று நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக மிளகு, மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்றும் எனவே மிளகு சம்பந்தப்பட்ட உணவை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சித்த வைத்தியர்கள் கூறி வருகின்றனர்.

corona virus,immunity,black gold,poet vairamuthu ,கொரோனா வைரஸ்,நோய் எதிர்ப்பு சக்தி,கறுப்புத் தங்கம்,கவிஞர் வைரமுத்து

இந்த நிலையில் மிளகு குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கவிதை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மேற்குலகம் எதைத்தேடி இந்தியாவின் மேற்குக்கரையில் இறங்கியதோ -
அதை – அந்த மிளகை
எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.

மென்று, சாறுகுடித்து,
விழுங்கிவிடுங்கள்.

கொரோனாவின் எதிர்ப்பூட்டிகளுள்
ஒன்றாக நான் மிளகை நம்புகிறேன்;
அது கறுப்புத் தங்கம்.

Tags :