- வீடு›
- பொழுதுபோக்கு›
- சர்ச்சை ..நடிகை த்ரிஷாவின் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிடல்
சர்ச்சை ..நடிகை த்ரிஷாவின் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிடல்
By: vaithegi Sat, 25 Nov 2023 11:40:31 AM
த்ரிஷாவிடம் விசாரிக்க காவல்துறை திட்டம் ..... லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துயிருந்தார்.
இதேபோன்று லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.
இதற்கு இடையே த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், த்ரிஷாவிடம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கில் நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவுஎடுத்து உள்ளது. நடிகை த்ரிஷா அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தகவல் அளித்துள்ளது.