Advertisement

பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது

By: Nagaraj Thu, 27 Apr 2023 8:46:21 PM

பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது

சென்னை: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இருந்து ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு, முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் நாளை (ஏப்ரல் 28) வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாள்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Tags :
|
|