Advertisement

வசூலை அள்ளி குவிக்கும் பொன்னியின் செல்வன் 2

By: vaithegi Mon, 01 May 2023 11:44:14 AM

வசூலை அள்ளி குவிக்கும் பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

இதையடுத்து படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், பாகுபலியை மிஞ்சியதாகவும் கருத்துக்களை கூறி கொண்டு வருகிறார்கள். மேலும் விமர்சன ரீதியாக பார்க்கையில் முதல் பாகத்திற்கு எந்த அளவிற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதைப்போல 2-வது பாகத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

ponnis selvan 2 tamil,telugu,hindi,malayalam,kannada ,பொன்னியின் செல்வன் 2  , தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்,

இந்நிலையில், படம் வெளியாக்க 3 நாட்களை கடந்தும் இன்னும் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இதனையடுத்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

எனவே அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|