- வீடு›
- பொழுதுபோக்கு›
- இன்ஸ்டாகிராமில் சமந்தாவை முந்திய பூஜா ஹெக்டே!
இன்ஸ்டாகிராமில் சமந்தாவை முந்திய பூஜா ஹெக்டே!
By: Monisha Fri, 17 July 2020 11:08:15 AM
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்தது. சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திடீரென தனது சமூக வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் தனது சமூக வலைத்தள கணக்கை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பூஜா விளக்கம் அளித்தார்.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சமந்தாவின் ரசிகர்கள் பூஜாவை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் பூஜாவின் ரசிகர்களும் இதற்கு பதிலடி கொடுத்தனர். இதனால் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்கும் பனிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சமந்தாவை பூஜா ஹெக்டே முந்தியுள்ள தகவல் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் பூஜா ஹெக்டேவுக்கு 11 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். பூஜாவின் போட்டியாளரான சமந்தாவுக்கு 10.8 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இதனால் சமந்தாவை ஃபாலோயர்கள் விஷயத்தில் பூஜா ஹெக்டே ஓவர்டேக் செய்துவிட்டதாக பூஜாவின் ரசிகர்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து சமந்தா ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்
பிரபாஸ் நடிக்க உள்ள 'ராதே ஷ்யாம்' என்ற படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி என்று அறிவிக்கப்பட்டதால் அவருக்கு ஃபாலோயர்கள் திடீரென குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சமந்தா மிக நெருக்கத்தில் உள்ளதால் விரைவில் பூஜாவை அவர் ஓவர்டேக் செய்வார் என்று சமந்தா ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.