Advertisement

விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு அதிக வாய்ப்பு

By: Nagaraj Mon, 28 Dec 2020 2:17:15 PM

விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு அதிக வாய்ப்பு

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தில் அவரது ஜோடியாக நடிக்க பிரபல நடிகை பூஜா ஹெக்டேவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pooja hegde,telugu film,vijay film,acting opportunity ,பூஜா ஹெக்டே, தெலுங்கு திரையுலகு, விஜய் படம், நடிக்க வாய்ப்பு

இதையடுத்து நடிகர் விஜய் நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது . இந்நிலையில் பிரபல ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு தளபதி 65 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :