- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வால்டேர் வீரையா படத்தின் பூனக்காலு லிரிக் வீடியோ
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வால்டேர் வீரையா படத்தின் பூனக்காலு லிரிக் வீடியோ
By: Nagaraj Sat, 31 Dec 2022 4:55:46 PM
ஐதராபாத்: ‘வால்டேர் வீரையா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பூனக்காலு’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154வது படம் ‘ வால்டேர் வீரையா’. இந்தப் படத்தை இயக்குநர் பாபி என்ற கே.எஸ்.ரவீந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் ரவிதேஜாவும் நடிக்கவுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்
ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் தலைப்பு பாடல் சமீபத்தில் வெளியாகி
நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘வால்டேர்
வீரையா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பூனக்காலு’ பாடலின் லிரிக் வீடியோ
வெளியாகி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘வால்டேர் வீரையா’
திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது
குறிப்பிடத்தக்கது.