Advertisement

பிரபல நகைச்சுவை நடிகர் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

By: Nagaraj Mon, 03 Oct 2022 4:40:41 PM

பிரபல நகைச்சுவை நடிகர் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

ஆந்திரா : மனைவியை விட்டு பிரிந்த பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் ஜீவனாம்சமாக ரூ.8 லட்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிருத்விராஜ் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமியை 1984 இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.



30 lakhs,famous,income,prithviraj,telugu,court ,ஜீவனாம்சம், நகைச்சுவை, நடிகர், பிருத்விராஜ், ஸ்ரீலட்சுமி

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து விஜயவாடா கோர்ட்டில் பிருத்விராஜ் மீது ஸ்ரீலட்சுமி வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “பிரித்விராஜ் படங்களில் நடிக்க முயன்றபோது, ​​அவரது செலவுகள் அனைத்தையும் எனது பெற்றோர் பார்த்துக் கொண்டனர். 2016 ஏப்ரலில் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர்.

இப்போது நான் பிறந்த வீட்டில் இருக்கிறேன். இனி நான் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன் என்றார். இப்போது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மாதம் ரூ.30 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் என தெரிகிறது.

ஆகையால் எனக்கு மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். இதை பரிசிளித்த நீதிபதி இந்திரா பிரியதர்ஷினி. நடிகர் பிருத்விராஜின் சொத்து மற்றும் வருமானம் தொடர்பான விவரங்களை பரிசீலித்து, அவரது மனைவிக்கு மாதம் ரூ.8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டார்.

Tags :
|
|
|