Advertisement

பிரபல ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸ் வழங்குகிறது இலவச சலுகை

By: Nagaraj Sat, 21 Nov 2020 8:55:37 PM

பிரபல ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸ் வழங்குகிறது இலவச சலுகை

நெட்பிளிக்ஸ் வழங்கும் இலவச சலுகை... இந்தியாவின் பிரபல ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் மக்களுக்குப் புதிய சலுகை ஒன்றை அறிவித்திருக்கிறது.

வருகிற டிசம்பர் முதல் வார இறுதி, அதாவது டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதி இந்தியாவில் யார் வேண்டுமானாலும் நெட்ஃப்ளிக்ஸில் அவர்களுக்கு அபிமான படங்கள் மற்றும் தொடர்களைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இதை ஸ்ட்ரீம் ஃபெஸ்ட் (Stream Fest) என அழைக்கிறது.

இதற்கு ஒன்றும் பெரிதாகச் செய்யத் தேவையில்லை. Netflix.com/StreamFest என்ற தளத்தில் பதிவுசெய்தால் போதும். கிரெடிட்/டெபிட் கார்டு என பேமன்ட் சார்ந்த எந்த கூடுதல் விவரமும் கேட்கப்படாது. தற்போது இருக்கும் ரூ.499 சந்தாவில் இருக்கும் வசதிகள் உங்களுக்கு இரண்டு நாள்களுக்குத் தரப்படும்.

netflix,free offer,can stream,recommend ,நெட் பிளிக்ஸ், இலவச சலுகை, ஸ்டம்ரீம் செய்யலாம், பரிந்துரை

டிசம்பர் 5 தொடங்கும் நள்ளிரவில் தொடங்கி டிசம்பர் 6 இரவு முடியும் வரை நிகழ்ச்சிகளை உங்களால் ஸ்ட்ரீம் செய்யமுடியும். SD (standard-definition) தரத்தில் மட்டுமே உங்களால் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யமுடியும். மற்றபடி சாதாரணமாக எப்படி நெட்ஃப்ளிக்ஸ் இயங்குமோ அப்படியேதான் இந்த இரண்டு நாட்களிலும் இயங்கும்.

உங்களால் தனியாக புராஃபைல்கள் உருவாக்க முடியும். விருப்பமான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை 'My List'-ல் சேர்த்து உங்கள் விருப்பத்திற்கேற்ற நெட்ஃப்ளிக்ஸின் பரிந்துரையைப் பெறமுடியும். ஆண்ட்ராய்டு/ஐஓஎஸ் மொபைல் ஆப், பிரவுசர், டிவி, கேமிங் கன்சோல் என எந்த சாதனத்திலும் நீங்கள் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

Tags :