Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாசிட்டிவ் விமர்சனங்கள்... அயோத்தி படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாசிட்டிவ் விமர்சனங்கள்... அயோத்தி படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

By: Nagaraj Sat, 11 Mar 2023 11:47:20 PM

பாசிட்டிவ் விமர்சனங்கள்... அயோத்தி படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... சசிகுமார், லூம்ரா மற்றும் போஸ் வெங்கட் நடிப்பில் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அயோத்தி’. இப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் புனித யாத்திரை மேற்கொண்ட ஒரு குடும்பத்தில் ஏற்படும் மரணம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை கூறும் இந்த படம் தற்போது ரசிகர்களை கவர ஆரம்பித்துள்ளது.

இந்த வாரம் வெளியான மற்ற படங்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்காத நிலையில் சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

movie,positive comments,rating, ,அயோத்தி, திரையரங்குகள், போஸ் வெங்கட்

அயோத்தி படம் ரிலீஸான அன்றே ரசிகர்களை கவரவில்லை. ஆனால் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால், அதன் பிறகு படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் கூட கடந்த ஒரு வாரமாக வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களால் அயோத்தி படத்துக்கு திரைகளின் எண்ணிக்கைக் கூட ஆரம்பித்துள்ளது. இந்த வாரம் வெளியான படங்களும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதது அயோத்தி படத்துக்கு கூடுதல் சாதகம்.

Tags :
|
|