Advertisement

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அரசியல் அரங்கில் பரபரப்பு

By: Nagaraj Thu, 28 Sept 2023 5:03:37 PM

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அரசியல் அரங்கில் பரபரப்பு

சென்னை: அட இது இல்லைன்னா என்ன? ஆட்சியை புடிச்சிடுவோம்ன்னு விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர் அரசியல்வாதிகளுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகபடியான பாஸ்கள் கோரிக்கை எழுந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

vijay fans,poster,rule,audio launch,politics,production ,விஜய் ரசிகர்கள், போஸ்டர், ஆட்சி, ஆடியோ லான்ச், அரசியல், தயாரிப்பு

ஆனால் இதில் அரசியல் அழுத்தம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் இதை நம்புவதற்கு தயாராக இல்லை. இதனால் போஸ்டர் அடித்து அரசியல்வாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

அந்த போஸ்டரில் ஆடியோ லாஞ்ச் இல்லைனா... என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி ! என செங்கல்பட்டில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.

மேலும் இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|
|