Advertisement

பாஜகவில் இணைந்தார் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்!

By: Monisha Fri, 24 July 2020 11:36:26 AM

பாஜகவில் இணைந்தார் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்!

பாஜகவில் கடந்த சில மாதங்களாக சினிமா பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு பாஜகவில் பொறுப்புகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பாஜகவில் பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் இணைந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்த பிரமிட் நடராஜன் இதுகுறித்து கூறியதாவது:-

"பாஜகவில் இணைந்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போது தர்மம் கடவுள் ரூபத்தில் தலைகாக்கும். அப்படி இப்போது கடவுள் மோடி ரூபத்தில் பூமிக்கு அதர்மத்தை அழிக்க வந்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

பிரமிட் நடராஜன் பிரெண்ட்ஸ், சமுத்திரம், துள்ளுவதோ இளமை, வில்லன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். லவ் பேர்ட்ஸ், எட்டுப்பட்டி ராசா, பிஸ்தா, பொன்மனம், சங்கமம் உள்ளிட்ட ஒருசில படங்களை தயாரித்துள்ளார்.

Tags :
|