Advertisement

விஜய் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து தயாரிப்பாளர் அப்டேட்

By: Nagaraj Thu, 09 Nov 2023 07:10:11 AM

விஜய் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து தயாரிப்பாளர் அப்டேட்

சென்னை: விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.

fans,vijay film,producer,update,director birthday ,ரசிகர்கள், விஜய் படம், தயாரிப்பாளர், அப்டேட், இயக்குனர் பிறந்தநாள்

சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. வெங்கட்பிரபு பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மேதை வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பித்துபிடிக்கும் பல படப்பிடிப்பு நாள்கள் இருக்கின்றன.

தளபதி 68 படத்துக்கான அப்டேட்: தாய்லாந்தில் முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. பிறந்தநாள் என்பதால் வெங்கட்பிரபுக்கு இன்று விடுமுறை)” எனப் பதிவிட்டுள்ளார்.

கேட்காமலே அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு மிக்க நன்றி என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|