Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விறுவிறுப்பான வாக்குப்பதிவுடன் நடக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்

விறுவிறுப்பான வாக்குப்பதிவுடன் நடக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்

By: Nagaraj Sun, 22 Nov 2020 12:32:45 PM

விறுவிறுப்பான வாக்குப்பதிவுடன் நடக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்

விறுவிறுப்பாக நடக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்... பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில், ஓய்வு பெற்ற நீதியரசர் ஜெயசந்திரன் தலைமையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 26 பதவிகளுக்கு 120 பேர் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் மொத்தம் 1,303 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் டி.ராஜேந்தர், மற்றும் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி சார்பில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் இரு அணிகளாக போட்டியிடுகின்றனர்.

producers,election,vote count,tomorrow morning ,தயாரிப்பாளர்கள், தேர்தல், வாக்கு எண்ணிக்கை, நாளை காலை

மேலும், தேனப்பன் பி.எல் இவ்விரு அணிகளையும் சாராமல் தனித்து, தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். காலை 8.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை துவங்கி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனிடையே, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தங்க நாணயம் கொடுத்து வாக்கு வாங்குவதாக டி.ஆர். அணி மீது, இயக்குனர் பிரவீன் காந்த், ஜெ.சதீஷ் குமார் உள்ளிட்டோர் குற்றச்சாட்டினர். இதனால், தேர்தலின் போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags :