Advertisement

ரசிகர்களை கவர்ந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ

By: Nagaraj Sat, 07 Jan 2023 5:35:06 PM

ரசிகர்களை கவர்ந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ

சென்னை: அதிரடியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ. மேலும் இந்த சீசனில் புதிய கோமாளியாக ஜி.பி.முத்து சேர்ந்துள்ளதும் உறுதியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் படு பிரபலம். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியும் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

cook with komali,bigg boss,promo video,gp muthu,fans ,குக் வித் கோமாளி, பிக்பாஸ், ப்ரோமோ வீடியோ, ஜி.பி.முத்து, ரசிகர்கள்

90 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கும் நிலையில் ரசிகர்கள் பிக்பாஸை தாண்டி எதிர்ப்பார்க்கும் குக் வித் கோமாளி 4வது சீசன் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.

அதாவது இந்த 4வது சீசனில் புதிய கோமாளிகள் இணைந்துள்ளார்கள், அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜி.பி.முத்துவும் உள்ளார். இதற்காக அதிரடியாக வந்த குக் வித் கோமாளி 4வது சீசனின் புரொமோ ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :