Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரஜினியின் மிரட்டும் குரலில் ஜெயிலர் படத்தின் 2வது பாடலுக்கான ப்ரோமோ வீடியோ

ரஜினியின் மிரட்டும் குரலில் ஜெயிலர் படத்தின் 2வது பாடலுக்கான ப்ரோமோ வீடியோ

By: Nagaraj Sun, 16 July 2023 4:33:46 PM

ரஜினியின் மிரட்டும் குரலில் ஜெயிலர் படத்தின் 2வது பாடலுக்கான ப்ரோமோ வீடியோ

சென்னை: ப்ரோமோ வீடியோ... ரஜினியின் குரலில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமா வீடியோ வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார் வில்லனாகவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

promo video,rajinis voice,reception,jailer,movie ,ப்ரோமோ வீடியோ, ரஜினியின் குரல், வரவேற்பு, ஜெயிலர், திரைப்படம்

அதற்கு முன்பாக இசை வெளியீட்டு விழாவை ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே படத்திலிருந்து காவாலா பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் 2ஆவது பாடலான ஹூக்கும் எனத் தொடங்கும் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையொட்டி இன்று ரஜினியின் மிரட்டலான குரலில் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமா வீடியோ வெளியாகியுள்ளது.

Tags :
|