Advertisement

குயின்சிதான் இந்த வாரம் வெளியேறுகிறாரா...! இணையத்தில் தகவல் உலா

By: Nagaraj Sat, 03 Dec 2022 09:09:44 AM

குயின்சிதான் இந்த வாரம் வெளியேறுகிறாரா...! இணையத்தில் தகவல் உலா

சென்னை: பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் இந்த வாரம் குயின்சி எலிமினேட் ஆகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ராபர்ட் மாஸ்டர் கடந்த வாரம் வெளியேறிய நிலையில் தற்போது குயின்சி வெளியேறுகிறார். ராபர்ட் மாஸ்டர் வீட்டிற்குள் இருந்தவரை குயின்சியை தனது மகள் என்று தெரிவித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது 6வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 55-வது நாள் எட்டியுள்ள நிலையில் 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

bigg boss 6,quincy,this week,eliminated,viewers ,பிக்பாஸ் 6, குயின்சி, இந்தவாரம், எலிமினேட், பார்வையாளர்கள்

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜிபி முத்து மகன் உடல் நிலையை கூறி தானாக வெளியேறினார். தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் செரினா, சாந்தி, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குயின்சி தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் பார்வையாளர்கள் பலரும் குயின்சி எலிமினேட் செய்யப்படுவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறி வருகிறார்கள்.

Tags :
|