Advertisement

பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.28 ஆயிரமாம்

By: Nagaraj Sun, 08 Jan 2023 6:01:04 PM

பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.28 ஆயிரமாம்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவின் ஒருநாள் சம்பளம் ரூ.28 ஆயிரம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயப்பட்ட முகமாக நுழைந்தவர் நடிகை ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியிலேயே பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி என ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

 ,சம்பளம், ரச்சிதா, பிக்பாஸ், 90 நாட்கள், விஜய் டிவி, ரசிகர்கள்

கடைசியாக கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்திருந்தார். பிக்பாஸிலும் அவர் சூப்பராக விளையாடி வருகிறார், பைனல் வரை அவர் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள ரச்சிதா பற்றி ரசிகர்கள் கவலையில் உள்ளனர். காரணம் அவர் கடைசி வரை வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். தற்போது 90 நாட்கள் வீட்டில் இருந்த அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 28 ஆயிரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags :