Advertisement

பாக்கியலட்சுமிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த ராதிகா

By: Nagaraj Fri, 16 Dec 2022 9:49:29 PM

பாக்கியலட்சுமிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த ராதிகா

சென்னை: பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி மற்றும் ராதிகா ஒருபுறமும், பாக்யா மற்றும் குடும்பத்தினர் இன்னொருபுறமும் என தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

காலனியில் நடந்த அசோஸியேஷன் செக்ரட்ரி தேர்தலில் பாக்யா போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக ராதிகாவை நிறுத்துகிறார் கோபி. ஆனால் தேர்தல் முடிவு வரும்போது பாக்யா பெரிய வித்தியாசத்தில் ஜெயித்து விடுகிறார். அதனால் ராதிகா எல்லோர் முன்னிலையில் அசிங்கப்பட்டு நிற்கிறார்.

மறுபுறம் பாக்கியலட்சுமி வங்கியில் கடன் வாங்கி கேட்டரிங் காண்ட்ராக்ட் வாங்க டெபாசிட் கட்டும் பணிகளை செய்கிறார். ஆனால் பாக்யாவுக்கு காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டாம் என அதே அலுவலகத்தில் பணியாற்றும் ராதிகா ஓனரிடம் கூறி விடுகிறார்.

serial,radhika,full willy,pakyalakshmi,fans ,சீரியல், ராதிகா, முழு வில்லி, பாக்கியலட்சுமி, ரசிகைகள்

அதனால் அவரும் பாக்யாவை அழைத்து காண்ட்ராக்ட் தர முடியாது என சொல்லி விடுகிறார். நான் இதற்கு அதிகம் செலவு செய்திருக்கிறேன் என பாக்யா கூறினாலும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை. பாக்யா கெஞ்சுவதை பின்னால் தூரத்தில் இருந்து பார்த்து மகிழ்ச்சி அடைகிறார் ராதிகா.

இப்படி முழு வில்லியாக ராதிகா தற்போது மாறி இருப்பது இந்த சீரியல் கதையை சூடுபிடிக்க வைத்து இருக்கிறது. இதனால் சீரியல் பார்த்து வரும் ரசிகைகள் ராதிகாவை திட்டி தீர்க்கின்றனர்.

Tags :
|