Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரஜினிக்கு வில்லன் ராகவா லாரன்ஸ்... அதிரடி கிளப்பும் இயக்குனர் லோகேஷ்

ரஜினிக்கு வில்லன் ராகவா லாரன்ஸ்... அதிரடி கிளப்பும் இயக்குனர் லோகேஷ்

By: Nagaraj Fri, 03 Nov 2023 7:11:39 PM

ரஜினிக்கு வில்லன் ராகவா லாரன்ஸ்... அதிரடி கிளப்பும் இயக்குனர் லோகேஷ்

சென்னை: ரஜினியின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கப்போவது ராகவா லாரன்ஸ் என்று அதிரடி செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படம் தலைவர் 171. சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் அன்பு அறிவு இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக கமிட்டாகியுள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் லோகேஷ் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என லோகேஷ் கூறியுள்ளார். இப்படத்தில் ரஜினியை தவிர்த்து வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என இதுவரை அறிவிக்கவில்லை.

villain character,raghava,rajini movie,lokesh,expectation ,வில்லன் கதாபாத்திரம், ராகவா, ரஜினி படம், லோகேஷ், எதிர்பார்ப்பு


தற்போது தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மாஸ்டர் படத்தில் வரும் வில்லன் பவானி கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸை முதன் முதலில் நடிக்க வைக்க அணுகியுள்ளார்.

ஆனால், அவருடைய கால்ஷீட் கிடைவில்லை என்பதால் தான் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதியை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக தலைவர் 171 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரஜினிகாந்தை தன்னுடைய குருவாக பார்க்கும் நபர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். அதனால் இப்படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிப்பார் என கூறப்படுகிறது.

Tags :
|