Advertisement

சின்மயிக்கு பாட வாய்ப்பு அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

By: Nagaraj Tue, 28 Mar 2023 10:39:01 PM

சின்மயிக்கு பாட வாய்ப்பு அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை; பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஒரு பாடலை பாட சின்மயிக்கு ரஹ்மான் ஆஃபர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சின்மயி. இப்படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருதுக்கு சென்றது. அதன் பிறகு பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல மொழிகளில் பாடி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்த அவர், தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட பல பெண்களின் பாலியல் புகார்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

chance,singer,song, ,சர்ச்சை, சின்மயி, மி டூ

இதனால் கடந்த சில வருடங்களாக சர்ச்சையின் மையத்தில் இருந்து வருகிறார். இதனால் பாடல்கள் பாடுவதற்கும், பின்னணி குரல் கொடுப்பதற்குமான வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்பட்டது.

இவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்த ரஹ்மான், சர்ச்சைக்கு பிறகு வாய்ப்பு தரவில்லை. தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஒரு பாடலை பாட சின்மயிக்கு ரஹ்மான் ஆஃபர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

Tags :
|
|
|