Advertisement

‘லியோ’ திரைப்படம் 4 நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல்

By: vaithegi Tue, 24 Oct 2023 10:35:33 AM

‘லியோ’ திரைப்படம் 4 நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல்


மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ நடித்துள்ள படம் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’. 2017ஆம் ஆண்டு இதே பெயரில் டேவிட் கிரென் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 20ஆம் தேதி பல்வேறு நாடுகளில் வெளியானது. இப்படம் இந்தியாவில் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 44 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இப்படத்தின் வசூலை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் முந்தி உள்ளது.

leo,us dollar ,லியோ, அமெரிக்க டாலர்


இப்படம் உலக அளவில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக திரைப்படங்களின் வசூல் பற்றி புள்ளிவிவரங்களை வெளியிடும் காம்ஸ்கோர் தளம் தெரிவித்துள்ளது. இதை முன்னணி அமெரிக்க ஊடகமான வெரைட்டி தளமும் உறுதி செய்து உள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக நேற்று (அக்.24) படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Tags :
|