Advertisement

கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படத்தில் ரைசா வில்சன்

By: Monisha Tue, 25 Aug 2020 12:23:07 PM

கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படத்தில் ரைசா வில்சன்

தினேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் ராஜூ. இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் ஒரு சில படங்களை இயக்கினார். தற்போது அவர் ரெஜினா நடித்துள்ள சூர்ப்பநகை என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது

இந்த நிலையில் கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன் நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

raisa wilson,karthik raju,apple juice studio,cinema,film ,ரைசா வில்சன்,கார்த்திக் ராஜு,ஆப்பிள் ஜூஸ் ஸ்டூடியோ,சினிமா,படம்

இந்த படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவில், சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆப்பிள் ஜூஸ் ஸ்டூடியோ தயாரித்து உள்ளது.

ஏற்கனவே பியார் பிரேமா காதல் படத்தில் நாயகியாக நடித்த ரைசா வில்சன், அதன்பின்னர் அலையஸ், காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். தற்போது கார்த்திக் ராஜூ படத்திலும் நடிக்கவுள்ளார்.

Tags :
|