Advertisement

குக் வித் கோமாளியில் இருந்து ராஜ் அய்யப்பா இந்த வாரம் வெளியேற்றம்

By: Nagaraj Sun, 26 Mar 2023 9:29:55 PM

குக் வித் கோமாளியில் இருந்து ராஜ் அய்யப்பா இந்த வாரம் வெளியேற்றம்

சென்னை: குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் போட்டியாளர் ராஜ் அய்யப்பா வெளியேறியுள்ளார். இதனால் சுனிதா கண்கலங்கி உள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த எலிமினேஷன் சுற்றுகளில் கிஷோர் ராஜ்குமார், காளையன் வெளியேறியுள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் குறைந்த மதிப்பெண்களுடன் ஷெரின் மற்றும் ராஜ் அய்யப்பா இருவரும் இறுதி கட்டத்தில் இருந்தனர்.

judges: raj ayyappa,cook with komali,sunitha,kangalanginar ,ராஜ் அய்யப்பா, குக் வித் கோமாளி, சுனிதா, கண்கலங்கினார், நடுவர்கள்

இதில் ஷெரினை விட சற்று குறைவான மதிப்பெண்களை பெற்றதால் ராஜ் அய்யப்பா இந்த வாரம் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியுள்ளார்.

ராஜ் அய்யப்பா எலிமினேட் என நடுவர்கள் கூறியவுடன், புகழ், சுனிதா மற்றும் சிலர் கண்கலங்கினார்கள். அதே குக் வித் கோமாளி மூலம் தனக்கு கிடைத்த விஷயங்கள் குறித்தும் ராஜ் அய்யப்பா பகிர்ந்துகொண்டார். மீண்டும் வைல்ட் கார்ட் சுற்றில் அனைவரையும் சந்திக்கிறேன் என கூறிவிட்டு விடைபெற்று சென்றார் ராஜ் அய்யப்பா.

Tags :