Advertisement

ராஜமௌலிக்கு ஆஸ்துமா உள்ளது… நடிகை ஸ்ரேயா சரண் தகவல்

By: Nagaraj Fri, 16 Dec 2022 10:39:42 PM

ராஜமௌலிக்கு ஆஸ்துமா உள்ளது… நடிகை ஸ்ரேயா சரண் தகவல்

ஐதராபாத்: கோல்டன் க்ளோப் விருதுகளில் இரண்டு முக்கிய பிரிவுகளில் RRR படம் தேர்வாகி இருக்கிறது. இந்நிலையில் ராஜமௌலி அதிகமாக கஷ்டப்பட்டு தான் RRR படத்தை எடுத்தார். அவருக்கு ஆஸ்துமா இருக்கிறது என நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்து இருக்கிறார்.

இயக்குனர் ராஜமௌலி தற்போது இந்திய சினிமாவில் உச்ச இயக்குனராக வளர்ந்து இருக்கிறார். அவரது ஆர்ஆர்ஆர் படம் ஹாலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

rrr film,ramcharan,shreya charan,rajamouli,asthma ,ஆர்ஆர்ஆர் படம், ராம்சரண், ஸ்ரேயா சரண், ராஜமௌலி, ஆஸ்துமா

RRR படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் கோல்டன் க்ளோப் விருதுகளில் இரண்டு முக்கிய பிரிவுகளில் RRR படம் தேர்வாகி இருக்கிறது.

ராஜமௌலி அதிகமாக கஷ்டப்பட்டு தான் RRR படத்தை எடுத்தார், அவருக்கு ஆஸ்துமா இருக்கிறது என நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்து இருக்கிறார்.

RRR படத்தில் ராம் சரணுக்கு அம்மா ரோலில் அவர் நடித்து இருப்பார். அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டபோது ராஜமௌலிக்கு ஆஸ்துமா அட்டாக் வந்தது. ஆனாலும் அவர் ஷூட்டிங் செய்தார் என ஸ்ரேயா கூறி இருக்கிறார்.

Tags :