Advertisement

ஜப்பானில் புதிய சாதனை படைத்த இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம்

By: Nagaraj Sat, 08 Apr 2023 10:55:18 AM

ஜப்பானில் புதிய சாதனை படைத்த இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம்

சென்னை: இயக்குனர் ராஜமௌலியின் RRR படம் ஜப்பானியில் புது சாதனை படைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராஜமௌலியின் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் உலக அளவில் பாப்புலர் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஹாலிவுட்டில் நடிக்கவும் தற்போது வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

japan,rrr film,achievement,collection,oscar ,ஜப்பான், ஆர்ஆர்ஆர் படம், சாதனை, வசூல், ஆஸ்கார்

RRR படம் சமீபத்தில் ஜப்பானில் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆரம்பதில் இருந்தே அதிக அளவு வரவேற்பு அங்கு கிடைத்து வந்த நிலையில் ஆஸ்கார் வென்ற பிறகு வரவேற்பு இன்னும் கூடி இருக்கிறது.

தற்போது RRR ஜப்பானில் மட்டும் 100 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. மேலும் படத்தை இதுவரை 1 மில்லியன் ரசிகர்கள் அங்கு பார்த்திருக்கிறார்களாம். இதில் ஹைலைட் என்னவென்றால் தற்போது மேலும் 27 ஐமேக்ஸ் தியேட்டர்களில் RRR ஜப்பானில் வெளியாகி இருக்கிறது என்பது தான்.

Tags :
|