Advertisement

கைதி உடையில் வந்து உறுதிமொழி எடுத்த ரஜினி ரசிகர்கள்

By: Nagaraj Fri, 11 Aug 2023 07:24:52 AM

கைதி உடையில் வந்து உறுதிமொழி எடுத்த ரஜினி ரசிகர்கள்

சென்னை: ஜெயிலர் படம் பார்க்க நேற்று கைதி உடையில் வந்த ரஜினி ரசிகர்கள் இனி மது குடிக்கமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 169 திரைப்படமான ஜெயிலர் நேற்று ரிலீஸ் ஆனது. மதுரையில் 28 தியேட்டர்களில் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை காண மதுரையில் தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர்.

மதுரை பெரியார் பஸ் நிலையப் பகுதியில் உள்ள தியேட்டர் முன்பு ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ், துணை செயலாளர் அழகர் உள்ளிட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டனர்.

theatres,aaravaram,rajini fans,affirmation,jailer ,தியேட்டர்கள், ஆரவாரம், ரஜினி ரசிகர்கள், உறுதிமொழி, ஜெயிலர்

பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மதுரையில் தியேட்டரில் ஜெயிலர் படம் பார்க்க சிறைக்கைதி வேடத்தில் வந்த ரசிகர்கள். சுமார் 50 கிலோ எடையுள்ள கேக் வெட்டி ஜெயிலர் படத்தை வரவேற்றனர். முதல் காட்சியை காண ரசிகர்கள் சிலர் சிறை கைதிபோல உடையணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து தியேட்டர் வாசலில் இனிமேல் மது அருந்த மாட்டோம் என்று உறுதிமொழியையும் எடுத்தனர். இதையடுத்து அவர்கள் தியேட்டர்களில் ஆர்வத்துடன் சென்று படம் பார்த்தனர்.

Tags :