Advertisement

மற்றவற்றில் கெத்து காட்டும் ரஜினி... நடனம் என்றால் நடுங்கிடுவாராம்

By: Nagaraj Sun, 19 Nov 2023 12:27:57 PM

மற்றவற்றில் கெத்து காட்டும் ரஜினி... நடனம் என்றால் நடுங்கிடுவாராம்

சென்னை: டான்ஸ் என்றாலேயே நடிகர் ரஜினிகாந்திற்கு நடுக்கம் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

நடிகர் ரஜினியின் தன்னுடைய படங்களில் நடிக்கும் ஸ்டைலுக்காகவே பெரிய தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என கூறலாம். அந்த அளவிற்கு ஒரு காட்சி சாதாரணமாக இருந்தாலும் அதை ஸ்டைலாக மாற்றி தனக்கான ஒரு பாணியை அமைத்து அனைவரையும் ரஜினிகாந்த் வியக்க வைத்து விடுவார். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பின் போது நடன காட்சிகள் வந்தாலே நடுங்கி விடுவாராம்.

இந்த தகவலை பிரபல நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் நடன காட்சிகள் என்றால் மட்டும் சற்று பதட்டம் அடைந்து விடுவாராம். படபிடிப்பு சமயங்களில் நடன காட்சி வந்தது என்றால் அந்த மாஸ்டர்களிடம் நடன காட்சியா என்பது போல அதிர்ச்சி அடைந்து விடுவாராம்.

rajini,dance scene,prabhu deva,tremor,kethu ,ரஜினி, நடன  காட்சி, பிரபுதேவா, நடுக்கம், கெத்து

ஆனால் படப்பிடிப்பில் மற்ற காட்சிகளில் எல்லாம் அசத்தலாக நடித்து கெத்தாக நடிப்பாராம். நடன காட்சி என்றால் ரோபோ போல பயந்துவிடுவாராம். பாடல் காட்சி எடுக்கிறோம் என்றவுடன் காலில் 20-பது கயிறுகளை கட்டிவிட்டது போல ஆகிவிடுவாராம். பிறகு படக்குழுவினர் உங்களுக்கு தெரிந்த ஸ்டெப்களை போடுங்கள் என்று கூறுவார்களாம்.

அதற்கு ரஜினி நீங்கள் சொல்வது சரி தான் இருந்தாலும் நடனம் என்றாலே சற்று பயமாக இருக்கிறது என கூறுவாராம். எனவே எப்போதும் ரஜினிகாந்திற்கு நடனம் மீது பெரிய மரியாதையும் பயம் கலந்த ஒரு மரியாதையும் இருப்பதாகவும் பிரபுதேவா கூறியுள்ளார்.

Tags :
|
|