Advertisement

அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு பறந்த ரஜினிகாந்த்

By: Nagaraj Sun, 13 Dec 2020 10:04:03 PM

அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு பறந்த ரஜினிகாந்த்

ஐதராபாத்துக்கு பறந்த ரஜினி... நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அண்ணாத்த படப்பிடிப்புக்காக இன்று தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் டிசம்பர் 31ல் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தான் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இன்னும் 40% பணிகள் மட்டுமே தன்னுடையது இருப்பதாகக் கூறிய ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு நடித்து முடிப்பேன் என்று உறுதி கூறினார்.

ரஜினிகாந்த், நேற்று (டிசம்பர் 12) பெங்களூரில் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிலையில், ரஜினிகாந்த் தான் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத்துக்கு இன்று தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

annatha shooting,solo flight,hyderabad,rajini ,அண்ணாத்த படப்பிடிப்பு, தனி விமானம், ஐதராபாத், ரஜினி

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிக்காந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுவதால் படிப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் தனி விமானத்தில் இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததும் சென்னை திரும்பி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார்.

Tags :