Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • திரை வாழ்க்கையில் 45 ஆண்டுகள் நிறைவு...நீங்கள் இல்லாமல் நான் இல்லை; ரஜினிகாந்த் உருக்கம்

திரை வாழ்க்கையில் 45 ஆண்டுகள் நிறைவு...நீங்கள் இல்லாமல் நான் இல்லை; ரஜினிகாந்த் உருக்கம்

By: Monisha Mon, 10 Aug 2020 10:30:45 AM

திரை வாழ்க்கையில் 45 ஆண்டுகள் நிறைவு...நீங்கள் இல்லாமல் நான் இல்லை; ரஜினிகாந்த் உருக்கம்

நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கிய திரை பயணம் 45-ஆம் ஆண்டை நிறைவு செய்யவுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ள ஒரு மனிதர், கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தனது நடிப்பாலும், ஸ்டைலாலும், பஞ்ச் வசனங்களாலும், மக்கள் சேவையாலும், ரசிகர்கள் மனங்களில் நிறைந்து உள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்த அவர் தற்போது அண்ணாத்தவாக அசத்தி வருகிறார்.

screen career,actor rajinikanth,acting,style,fans ,திரை வாழ்க்கை,நடிகர் ரஜினிகாந்த்,நடிப்பு,ஸ்டைல்,ரசிகர்கள்

ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக 45 வருட கொண்டாட்ட காமன் டிபியை தற்போது தென்னிந்திய திரை பிரபலங்களை வைத்து வெளியிடுகின்றனர். நேற்று ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- "என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என பதிவிட்டுள்ளார்.

Tags :
|
|