Advertisement

லால் சலாம் படத்தின் சில காட்சிகளை பார்த்து மிரண்டு போன ரஜினிகாந்த்

By: Nagaraj Fri, 28 Apr 2023 09:12:38 AM

லால் சலாம் படத்தின் சில காட்சிகளை பார்த்து மிரண்டு போன ரஜினிகாந்த்

சென்னை: லால் சலாம் படத்தின் இதுவரை எடுத்த காட்சிகளை ரஜினிகாந்திற்கு போட்டு காட்டியுள்ளார் ஐஸ்வர்யா. படத்தை பார்த்த ரஜினிகாந்த், மிரண்டு போய்விட்டாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் பிரபல இயக்குநருமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கிறார்.

lal salaam,shooting,rajinikanth,appreciation,fans,talks ,லால் சலாம், படப்பிடிப்பு, ரஜினிகாந்த், பாராட்டு, ரசிகர்கள், பேச்சு

இப்படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்நிலையில், இதுவரை எடுத்த காட்சிகளை ரஜினிகாந்திற்கு போட்டு காட்டியுள்ளார் ஐஸ்வர்யா. படத்தை பார்த்த ரஜினிகாந்த், மிரண்டு போய்விட்டாராம்.

நம் குடும்பத்தில் இப்படியொரு சிறந்த இயக்குநரா என்று தன் மகளை புகழ்ந்துவிட்டார் ரஜினி என தகவல் வெளியாகியுள்ளது. தந்தையிடம் இருந்து பாராட்டுகளை பெற்றதனால் ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியில் உள்ளார் என கூறப்படுகிறது.

இதனால் லால் சலாம் திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் நல்ல விருந்தாக இருக்கும் என பேச்சு எழுந்துள்ளது.

Tags :
|