Advertisement

ரஜினி மகள் சௌந்தர்யா இணையத் தொடரை இயக்க உள்ளாராம்

By: Nagaraj Thu, 01 June 2023 7:57:43 PM

ரஜினி மகள் சௌந்தர்யா இணையத் தொடரை இயக்க உள்ளாராம்

சென்னை: இணையத் தொடரை இயக்குகிறார்... நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் இணையத் தொடர் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் இயக்குநர்களாக உள்ளனர். சினிமாவில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து படங்களை இயக்கியும் வருகின்றனர்.

sathyaraj,protagonist,web serial,rajinis daughter,direction ,
 சத்யராஜ், முக்கிய கதாபாத்திரம், இணைய தொடர், ரஜினி மகள், இயக்கம்

தற்போது, ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் இணையத் தொடர் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்.

Tags :