- வீடு›
- பொழுதுபோக்கு›
- பொங்கலுக்கு களமிறங்க இருக்கும் ரஜினி திரைப்படம்
பொங்கலுக்கு களமிறங்க இருக்கும் ரஜினி திரைப்படம்
By: vaithegi Sun, 01 Oct 2023 4:54:18 PM
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து உள்ள அயலான் திரைப்படமும் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் வெளியாகிறது.
ஏற்கனவே 2 பெரிய படங்கள் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், மேலும் ஒரு திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைந்து உள்ளது. அது என்ன திரைப்படம் என்றால் ரஜினிகாந்தின் மகள் இயக்கத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்து வரும் லால் சலாம் திரைப்படம் தான்.
இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார்கள். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காரணமே படத்தில் ரஜினிகாந்த் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பது தான். படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.