Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரன்பீர் நடிக்க உள்ளது உறுதியானது

சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரன்பீர் நடிக்க உள்ளது உறுதியானது

By: Nagaraj Tue, 28 Feb 2023 9:59:42 PM

சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரன்பீர் நடிக்க உள்ளது உறுதியானது

மும்பை: கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ள தகவல் உறுதியாகி உள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அப்போது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

actor ranbir kapoor,biopic,ganguly, ,கங்குலி, நடிகர் ரன்பீர் கபூர், வாழ்க்கை வரலாறு

ரன்பீர் கபூர் சமீபத்தில் கங்குலியை சந்தித்து இந்த தகவலை உறுதி செய்தார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரன்பீர் கபூரிடம் கங்குலியின் வாழ்க்கை வரலாறு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் கங்குலி அவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்தில் நான் இடம்பெறவில்லை. இயக்குனர்கள் எனக்காக காதல் கதைகளை எழுதுகிறார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

Tags :
|