Advertisement

ரன்பீர் கபூரின் படத்திற்கு துவக்க வசூலால் ஏற்பட்ட அதிர்ச்சி

By: Nagaraj Tue, 26 July 2022 08:38:21 AM

ரன்பீர் கபூரின் படத்திற்கு துவக்க வசூலால் ஏற்பட்ட அதிர்ச்சி

மும்பை: காற்று வாங்கும் தியேட்டர்கள்... 4 வருடங்களுக்கு பின்னர் ரன்பீர் கபூர் நடிப்பில் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த வாரம் வெளியானது “ஷம்ஷேரா”. ட்ரெய்லர் வெளியானபோது நேர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட ஷம்ஷேராவுக்கு, படம் வெளியான பிறகான துவக்க வசூல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ரன்வீர் கபூர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ள போதிலும் பெரும்பாலான ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க தவறி இருக்கிறது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பல நாட்கள் படப்பிடிப்புக்கு பின் வெளியான “ஷம்ஷேரா” நாடு முழுவதும் குவித்துள்ள முதல் நாள் வசூல் வெறும் 10.24 கோடி ரூபாய் மட்டுமே.! 2வது நாள் வசூலும் 10 கோடி ரூபாயை ஒட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

collection,impact,hindi film,negative,review,theaters ,வசூல், பாதிப்பு, இந்திப்படம், எதிர்மறை, விமர்சனம், தியேட்டர்கள்

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மிக அதிக திரையரங்குகளில் அதாவது 4 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியான போதும், எதிர்பார்த்த வசூல் வராமல் போயிருப்பது படக்குழுவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் திரைப்பட ரிவியூக்களும் எதிர்மறையாக பதிவாக துவங்கியிருப்பது படத்தின் அடுத்தடுத்த நாட்கள் வசூலை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|