Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டசாய் ஸ்ரீநிவாஸ்சுடன் ராஷ்மிகாவுக்கு காதல்?

தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டசாய் ஸ்ரீநிவாஸ்சுடன் ராஷ்மிகாவுக்கு காதல்?

By: Nagaraj Tue, 04 Apr 2023 11:07:57 PM

தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டசாய் ஸ்ரீநிவாஸ்சுடன் ராஷ்மிகாவுக்கு காதல்?

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டசாய் ஸ்ரீநிவாஸ் மீது ராஷ்மிகாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு திரையுலகிலும், இணைய தளங்களிலும் தகவல் பரவி உள்ளது.

தமிழில் கார்த்தியுடன் சுல்தான், விஜய்யுடன் வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் முன்னணி நாயகி. ராஷ்மிகாவும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் டேட்டிங் செய்வதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது.

இருவரும் கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்தனர். அவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. விஜய்தேவரகொண்டாவின் குடும்ப நிகழ்ச்சியில் அந்த வீட்டு பெண் போலவே ராஷ்மிகா கலந்து கொண்டார்.

actor,kadhal,rashmika,telugu , காதல், தெலுங்கு, நடிகர், ராஷ்மிகா

ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கு ஜோடியாக சென்றுவந்த புகைப்படங்களும் வெளியாகி காதலை உறுதிப்படுத்துவதுபோல் அமைந்தது. இந்த நிலையில் தற்போது விஜய்தேவரகொண்டாவுடன் காதலை ராஷ்மிகா முறித்துக் கொண்டு விட்டதாகவும் புதிதாக தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டசாய் ஸ்ரீநிவாஸ் மீது ராஷ்மிகாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும் தெலுங்கு திரையுலகிலும் இணைய தளங்களிலும் தகவல் பரவி உள்ளது.

சமீபத்தில் இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அங்கு அவர்கள் நெருக்கமாக இருந்தனர். விமானநிலையத்திலும் ராஷ்மிகாவையும் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸையும் ஜோடியாக பார்க்க முடிந்தது. தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக இருக்கும் பெல்லம் கொண்ட ஸ்ரீநிவாஸ் இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

Tags :
|
|