- வீடு›
- பொழுதுபோக்கு›
- இராவண கோட்டம் படத்தின் பாடல்... நடிகை கீர்த்தி சுரேஷ் ரிலீஸ்
இராவண கோட்டம் படத்தின் பாடல்... நடிகை கீர்த்தி சுரேஷ் ரிலீஸ்
By: Nagaraj Wed, 15 Mar 2023 08:52:01 AM
சென்னை: இராவண கோட்டம் படத்தின் முதல்பாடலை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.
மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் விக்ரம் சுகுமாரன். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்ததாக இயக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவிவந்தது.
நடிகர் சாந்தனுவை வைத்து ‘இராவண கோட்டம்’ என்கிற படத்தை இயக்கிவந்தார். இதில் ஷாந்தனு கயல் ஆனந்தி முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். கண்ணன் ரவி தயாரிக்க வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதி செய்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் நேதா எழுதிய பாடலை ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலுக்கு அருமையான இசை, பிரத்யேகமான பாடல், இனிமையான பாடல் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.