Advertisement

பன்னி குட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

By: Nagaraj Sun, 26 June 2022 00:02:20 AM

பன்னி குட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை: பன்னி குட்டி பட ரிலீஸ் தேதி... நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் தயாரான ‘பன்னி குட்டி’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2015-ம் ஆண்டு கதிர், ரேஷ்மி மேனன் நடிப்பில் உருவான ‘கிருமி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுசரண் முருகையன். ‘கிருமி’ படத்திற்குப் பிறகு யோகி பாபு, கருணாகரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க ‘பன்னி குட்டி’ என்ற படத்தை இயக்கி வந்தார்.

2019-ம் ஆண்டே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், 2020-ம் ஆண்டு ஜனவரியில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஆனால் கொரோனா பொது முடக்கம், பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாத சூழல் நிலவியது.

expectation,piglet,storyline,yogi babu,picture ,எதிர்பார்ப்பு, பன்றிக்குட்டி, கதைக்களம், யோகிப்பாபு, படம்

இந்த நிலையில் வருகிற ஜூலை 8-ம் தேதி திரையரங்குகளில் பன்னி குட்டி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பன்றிக்குட்டியை சுற்றி நடக்கும் கதைக்களத்தில் உருவான இந்தப் படத்திற்கு, கிருஷ்ணகுமார் என்கிற கே இசைமையத்துள்ளார். யோகி பாபு, கருணாகரன் ஆகிய நடிகர்களின் நடிப்பில், நீண்ட நாட்கள் கழித்து வெளியாகும் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|