Advertisement

விரைவில் வெளியாகிறதாம் ஆர்ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலோன் படம்

By: Nagaraj Sun, 19 Mar 2023 9:35:42 PM

விரைவில் வெளியாகிறதாம் ஆர்ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலோன் படம்

சென்னை: ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலோன் படம் விரைவில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வானொலியில் ஆர்.ஜே.வாக இருந்த ஆர்.ஜே.பாலாஜி, சினிமாவில் கால் பதித்து, தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார். இவர் நடித்த மூக்குத்தி அம்மன், எல்கேஜி, வீட்ல விஷேசம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

movie,rj balaji,title, ,ஆர்.ஜே.பாலாஜி, வானொலி, வித்தியாசமான தலைப்பு

அவரது அடுத்த படமான ரன் பேபி ரன், பிப்ரவரி 3 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் அதிக வசூல் செய்யவில்லை. இதையடுத்து இந்தப் படம் OTTயில் வெளியானது.

இதைத் தொடர்ந்து அவர் நடித்த சிங்கப்பூர் சலோன் படம் வெளியாகிறது. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் தற்போது சொர்க்கவாசல் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் கருணாஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Tags :
|
|