Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ராபர்ட் மாஸ்டர்... ரச்சிதாவின் கணவர் ஹேப்பி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ராபர்ட் மாஸ்டர்... ரச்சிதாவின் கணவர் ஹேப்பி

By: Nagaraj Mon, 28 Nov 2022 10:33:08 AM

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ராபர்ட் மாஸ்டர்... ரச்சிதாவின் கணவர் ஹேப்பி

சென்னை: பிக்பாஸில் இருந்து குறைந்த வாக்குகள் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி உள்ளார். இந்த தகவல் ரச்சிதாவின் கணவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.


பிக்பாஸ் -6 தமிழ் நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ராபர்ட் மாஸ்டர் இந்த சீசனில் ரச்சிதா மேல் எனக்கு கிரஷ் இருக்கிறது என தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அதை ரச்சிதா புத்திசாலித்தனமாக தட்டிக் கழித்தார். இது ராபர்ட் மாஸ்டருக்கு நன்கு தெரிந்தாலும், இருக்கும் வாய்ப்புகளை அத்தனையும் பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

robert master,rachita,relief,left,husband,happiness ,ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, நிம்மதி, வெளியேறினார், கணவர், மகிழ்ச்சி

அதே போல ராபர்ட் மாஸ்டரின் முயற்சிகளுக்கு எல்லாம் ரச்சிதா விழும் ஆளில்லை என ரச்சிதாவின் கணவர் தினேஷ் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். நிச்சயமாக ராபர்ட் மாஸ்டரை ரச்சிதா ஏற்றுக் கொள்ளவே மாட்டார் என்றும் தினேஷ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்திருந்த ராபர்ட் மாஸ்டர் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் ரச்சிதாவின் கணவர் மகிழ்ச்சியில் உள்ளாராம். இனி ரச்சிதா எந்த பிரச்சினையும் இல்லாமல் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார் என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

Tags :
|
|