Advertisement

ரோலக்ஸ் சூர்யா... விக்ரம் 3 குறித்து கமல் வெளியிட்ட வீடியோ

By: Nagaraj Tue, 07 June 2022 10:25:47 PM

ரோலக்ஸ் சூர்யா... விக்ரம் 3 குறித்து கமல் வெளியிட்ட வீடியோ

சென்னை: தெறிக்க விடும் நடிப்பில் விக்ரம் 3 விரைவில் தயாராகும் என்ற தகவல் ரசிர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் சக்கைபோடு போட்டு வருகிறது. செம அசால்ட்டாக ரூ.100 கோடியை எட்டி வருகிறது.

கமல் நடிப்பில் இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. ஆனால் இந்த விக்ரம் திரைப்படம் அதை எல்லாம் தாண்டும் அளவிற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

fans,aval,kamal,vikram 3,surya,mothal,rolex ,ரசிகர்கள், ஆவல், கமல், விக்ரம் 3, சூர்யா, மோதல், ரோலக்ஸ்

அந்தவகையில் படம் வெளியான நான்கு நாட்களிலேயே பல கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் இன்னும் அதிகரித்து ஒரு வாரத்திலேயே 100 கோடியை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடைசி சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருக்கும் சூர்யாவின் நடிப்பு பலரையும் மிரட்டியுள்ளது. கமல்ஹாசன் தற்போது ஒரு வீடியோ மூலமாக ரசிகர்களிடம் உரையாடி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது தரமான படைப்புகளை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் என்றும் மறந்ததில்லை.

அதேபோன்று விக்ரம் திரைப்படத்தின் மூலமாக என்னையும், பட குழுவினரையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது எங்கள் பாக்கியம். அந்த வகையில் நான் அனிருத், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்.

மேலும் சில நிமிடங்கள் மட்டுமே நடித்து அரங்கையே அதிர வைத்த சூர்யா இதை அன்பிற்காக மட்டுமே செய்தார். அவருக்கு செலுத்தும் நன்றியை நாங்கள் இருவரும் இணையும் அடுத்த படத்தின் மூலமாக காட்ட இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ரோலக்ஸ் கதாபாத்திரம் அடுத்த படத்திலும் தொடரும் என்று தெரிகிறது. இதனால் சூர்யாவுடன் மோத இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Tags :
|
|
|
|
|