Advertisement

வணங்கான் படத்தில் நாயகியாக ரோஷினி கதாநாயகியாக நடிக்கிறாராம்

By: Nagaraj Tue, 07 Mar 2023 8:16:07 PM

வணங்கான் படத்தில் நாயகியாக ரோஷினி கதாநாயகியாக நடிக்கிறாராம்

சென்னை: வணங்கான் படத்தை இயக்குனர் பாலா மீண்டும் தொடங்குகிறார். இதில் நாயகியாக ரோஷினி நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூர்யா தயாரித்து தயாரித்து பாலா இயக்கத்தில் 40 நாட்கள் படமாக்கப்பட்ட வணங்கான் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குனர் பாலா தரப்பில் இருந்து விளக்க கடிதம் வெளியானது. அதன்பிறகு கதையில் சில மாற்றங்களை செய்த இயக்குனர் பாலா, வணங்கான் என்ற பெயரில் படத்தை அருண் விஜய்யை வைத்து தொடர இருப்பதாக கூறப்பட்டது.

movie,vanangan,withdraw, ,கதாநாயகி, சூர்யா, வணங்கான், ரோஷினி, குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்த நாயகி கீர்த்தி ஷெட்டி தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் விலகி தற்போது புதிய ஒளிப்பதிவாளராக ஆர்.பி.குருதேவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் முதலில் ஒப்பந்தமாகியிருந்த க்ரித்தி ஷெட்டிக்கு பதிலாக ரோஷினி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஜடா, ஏமாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|