Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரூ.100 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா, கார் வகைகள்; அதிர விடும் நடிகர் பிரபாஸ்

ரூ.100 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா, கார் வகைகள்; அதிர விடும் நடிகர் பிரபாஸ்

By: Nagaraj Wed, 09 Dec 2020 1:55:06 PM

ரூ.100 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா, கார் வகைகள்; அதிர விடும் நடிகர் பிரபாஸ்

நடிகர் பிரபாஸின் சொத்துக்கணக்கு அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது.

இந்திய சினிமாவை பொருத்தவரை பாலிவுட் நடிகர்களை ஓரம்கட்டி தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அனைவரையும் பிரமிக்க வைத்தவர் பிரபாஸ். அடுத்ததாக அவர் நடிக்கயிருக்கும் படங்களுக்கு இதுவரை 400 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம்.

பாகுபலி படங்களுக்கு முன்புவரை பிரபாஸ் என்றால் தெலுங்கு சினிமா மட்டுமே தெரியும். தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார். பிரபாஸ் படங்கள் தெலுங்கு சினிமாவை தாண்டி வெளி மாநிலங்களில் ஏன் தமிழில் கூட டப் செய்து வெளியிட மாட்டார்கள்.

ஆனால் பாகுபலி, பாகுபலி 2 படங்கள் உலக அளவில் பிரபாஸுக்கு புகழை சேர்த்துள்ளது. பாகுபலி படங்களுக்காக தன்னுடைய உடல் எடையை முரட்டுத்தனமாக ஏற்றி இறக்கி கடுமையாக உழைத்ததன் பயனாக தற்போது பல கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்து விட்டாராம்.

actor prabhas,property,swimming pool,farm ,நடிகர் பிரபாஸ், சொத்து, நீச்சல்குளம், பண்ணைத் தோட்டம்

பிரபாஸுக்கு விலையுயர்ந்த கார்களை வாங்குவதில் மிகப் பெரிய ஆர்வம் இருக்கிறதாம். அந்த வகையில் தற்போது அவரிடம் 68 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார், 2 கோடி மதிப்பிலான ஜாகுவார் கார் மற்றும் 8 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் 100 கோடி செலவில் பிரமாண்ட வீடு ஒன்று வைத்துள்ளாராம். மேலும் ஓய்வு நேரங்களில் தங்குவதற்காக சமீபத்தில் 60 கோடியில் பண்ணை வீடு வாங்கியுள்ளாராம். அந்த வீட்டில் விளையாடுவதற்கு மைதானம், நீச்சல் குளம், 6 படுக்கை அறைகள், ஏக்கர் கணக்கில் மிகப்பெரிய பண்ணைத் தோட்டம் ஆகியவை உள்ளதாம்.

தற்போதைக்கு மட்டும் பிரபாஸ் சொத்துக்களை கணக்கிட்டால் குறைந்தது ஆயிரம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஹைதராபாத்தில் செல்வ செழிப்பான நகரங்கள் அனைத்திலும் பிரபாஸுக்கு பல சொத்துகள் உள்ளதாம்.

Tags :