Advertisement

சினிமா துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்...ஆர்.கே.செல்வமணி தகவல்

By: Monisha Mon, 31 Aug 2020 10:35:19 AM

சினிமா துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்...ஆர்.கே.செல்வமணி தகவல்

கொரோனா நோய் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் சினிமா துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:-

"கொரோனாவால் திரையுலகம் 6 மாதங்களாக மூடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் இயங்கவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். எனவே சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். அரசு வழங்கும் நிபந்தனைகளை ஏற்று படப்பிடிப்புகளை நடத்த தயாராக இருக்கிறோம் ஏற்கனவே எங்கள் வேண்டுகோளை ஏற்று தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

cinema department,rk selvamani,cinema filming,theater,salary ,சினிமா துறை,ஆர்கே செல்வமணி,சினிமா படப்பிடிப்பு,தியேட்டர்,சம்பளம்

அரசின் நிபந்தனையோடு இந்த பணிகள் நடக்கின்றன. திரையுலகம் முடங்கியதால் பெப்சி தொழிலாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் சம்பளம் இழப்பும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டு உள்ளது.

இதன் மூலம் சினிமா துறைக்கு மொத்தம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ஏற்கனவே ரூ.10 லட்சம் வழங்கினர், இப்போது மீண்டும் ரூ.80 லட்சம் வழங்கி இருக்கிறார்கள். இந்த தொகை இன்று முதல் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.400 வீதம் வழங்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags :