Advertisement

ருத்ரன் படத்தின் 2வது பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரல்

By: Nagaraj Tue, 04 Apr 2023 5:41:30 PM

ருத்ரன் படத்தின் 2வது பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரல்

சென்னை: ருத்ரன் படத்தின் 2வது பாடலான பகைமுடி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடித்த படம் ருத்ரன். இப்படத்தை கதிரேசன் இயக்குகிறார்.

இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

internet,movie,release, ,இணையத்தில் வைரல், பகைமுடி, வெளியீடு, வைரல்

முனி, காஞ்சனா படங்களுக்கு பிறகு இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வரும் நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் பகைமுடி படத்தின் 2வது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 14ஆம் தேதி படம் வெளியாகிறது.

Tags :
|